சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை அண்ணாசிலை அருகே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தினந்தோறும் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வங்கியின் பக்கவாட்டு சுவரில் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்தும், நுழைவு வாயிலில் உள்ள பூட்டை உடைத்தும் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.