எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3ந்தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக 7 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.