வன்முறை வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்ஷாப் கட்சித் தலைவரான அவர், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வன்முறையைத் தூண்டியதாக கோஷர், கராச்சி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம், இம்ரான் கான் உள்பட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், ஊழல் வழக்கில் இம்ரான் கான் 13 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், அவர் உடனடியாக சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.