தெலங்கானாவில் நக்சலைட் நடமாட்டம் மிகுந்த இடத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்ததையடுத்து அம்மாவட்ட எஸ்.பி. நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தெலங்கானாவின் பத்ராதிரி கொத்தக்கூடம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் இங்கு நாடாளுமன்ற தேர்தல் எவ்விதமான வன்முறையும் இல்லாமல் நடைபெற்று முடிந்ததையடுத்து, போலீசாருக்கு விருந்தளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி. ரோஹித் ராஜ் ஐபிஎஸ் மகிழ்ச்சியின் மிகுதியில் நடனமாடியது வைரலாகி வருகிறது.