கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய 30 சதவீத பேர் பக்க விளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், முறையாக ஆய்வு நடத்தாமல், பக்க விளைவு இருப்பதாக, கூறப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவை திரும்ப பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை என்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.