திருப்பத்தூரில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூரில் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.