தேனியில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.
இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு பெரியகுளம், வடுகபட்டி, உள்ளிட்ட கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.