குற்றச் சம்பவங்களின் தொடக்கப்புள்ளியாக உள்ள போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் கடந்த 4 தினங்களில் மட்டும் 10-க்கும் அதிகமான கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இந்த குற்றங்களுக்கான தொடக்கப்புள்ளி என பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
இனியாவது தமிழக மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.