திருச்சியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருச்சியில் நேற்று 3 மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்து 115 செ.மீ. மழை பதிவானது. அதேபோல ஏர்போர்ட் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு நேற்றைய தினம் 12.94 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் விமான நிலைய ஓடுதளம் முழுவதும் மழைநீரால் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் இடம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் மழைநீரில் நடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.