கரூரில் கனமழையின் காரணமாக சர்க்கஸ் கூடாரம் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.
கரூரில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனையடுத்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில், கனமழையால் சர்க்கஸ் கூடாரம் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
மேலும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 12 பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். மழையின் காரணமாக சர்க்கஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.