கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.
இதனால் கோபாலபுரம் பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட வீடுகள், தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இதேபோல், கரூர் மாநகரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. பிரதோஷத்தை முன்னிட்டு பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை மழை நீரில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கனமழை காரணமாக வெங்கமேடு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த காலி சிலிண்டர்கள் மழையின் காரணமாக அடித்துச் செல்லும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.