மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கான கட்டுமான ஒப்பந்தம் எல் அன்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் பொக்லைன் இயந்திர உதவியுடன் முள்செடிகள் அகற்றப்பட்டன.
பின்னர், பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.