கடலூர் மாவட்டம் நெய்வேலியில், விழுப்புரம் இணை சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, கடலூர் மாவட்டம் வடக்குத்து பகுதியில் அமைந்துள்ள இணை சார்-பதிவாளர் தையல்நாயகி வீட்டில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.