நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பிரசவ வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களை உறவினர்கள் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.