திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.