கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45.07 அடியை எட்டியது.
இதனால் அணையில் இருந்து 3-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.