கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் ஆலைக்கழிவுகள் கலப்பதால் 5 டன் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் ரசாயன கழிவுகள் கலந்ததால் அங்கு மீனவர்கள் வளர்த்து வந்த சுமார் 5 டன் மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.