திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.