புதுச்சேரி கடற்கரையில் தடையை மீறி குளித்த இளைஞர்களை பிடித்து கடற்கரையை சுத்தம் செய்ய வைத்து போலீஸார் நூதன தண்டனை வழங்கினர்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதி கடந்த 4 தினங்களாக சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் தடையை மீறி வெளியூர் இளைஞர்கள் சிலர் கடலில் குளித்துக்கொண்டிருந்ததைக் கண்ட போலீஸார், அவர்களை கடற்பகுதி முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என நூதன தண்டனை வழங்கினர்