அபுதாபியில் லுலு குழுமத் தலைவர் யூசஃப் அலியுடன் நடிகர் ரஜினிகாந்த் ரோல்ஸ்ராய் காரில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில், அபுதாபி சென்ற ரஜினிகாந்தை லுலு குழுமத் தலைவர் யூசஃப் அலி வரவேற்று தன்னுடன் ரோல்ஸ்ராய் காரில் அழைத்துச் சென்றார். யூசஃப் அலியுடன் இணைந்து அந்நாட்டில் ரஜினிகாந்த் தொழில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.