ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அடுத்த செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராதா, கடந்த 18-ம் தேதி தலையணையை வைத்து முகத்தில் அழுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
விசாரணையில் ராதாவின் மகன் கணேசன் மற்றும் பேரன் அஜித்குமார் ஆகிய இருவரும், மூதாட்டி அணிந்திருந்த நான்கரை பவுன் நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் வாகன தணிக்கையின்போது இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.