சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகைக்கடை அதிபரிடம் பட்டாகத்தியைக் காட்டி மிரட்டி 60 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சரவணன்.
இவர் சென்னை ஜாபர்கான்பேட்டையில் இருந்து 60 சவரன் தங்க நகை, ஏழு கிலோ வெள்ளிப் பொருட்களை வாங்கிக் கொண்டு காரைக்குடிக்கு திரும்பியுள்ளார்.
பின்னர் காரைக்குடி ஐந்து விளக்கு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, சரவணனிடமிருந்த நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.