மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின்போது ஓடை நொய்யலாறு என அனைத்து இடங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு குளத்தில் வாழ்ந்த மீன்கள் செத்து மிதந்தன.
தொடர் மழை காரணமாக இயற்கை வளங்கள் அடித்துச் செல்லப்பட்டு குளத்தில் வந்து சேர்வதினால், மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்று மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.