கோவையில், பிரபல மருத்துவர்கள் இரண்டு பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், இரண்டு செல்ஃபோன்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை கர்நாடக மாநிலம் பெங்களூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு சோதனை மேற்கொண்டனர். கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஜாபர் இக்பால் மற்றும் நாராயணசாமி சாலையில் உள்ள நயன் சாதிக் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த செல்போன்களில் உள்ள எண்களை வைத்து விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.