கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவேரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து நாகையில் விவசாயிகள் தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதிநீர் பங்கிட்டின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை தருவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாகை அவுரித்திடலில், தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய விவசாய சங்க தலைவர்கள், “மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயலிழந்து போகும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.