செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் காவலர்கள் குடியிருப்பில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் சரவணன், வழக்கம்போல் பணியை முடித்து விட்டு ஓய்வெடுக்கத் திரும்பியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த காவலர் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து சுத்தம் செய்துள்ளார்.
அப்போது அறைக்குள் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் கால் உள்பட பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த சரவணன் அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், படுகாயமடைந்த சரவணனை மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.