நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்திய காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
கூடலூர் ஓவேலியில் தனியார் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏலக்காய் தோட்டத்துக்குள் மறைந்திருந்த காட்டு யானை பெண்களை தாக்கத் துரத்தியுள்ளது.
இதனைக் கண்ட ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தி பெண்களை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.