நெல்லை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க போவது இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகரம் கேடிசி நகரில், பிரபல உணவகம் முன்பு வாகைகுளத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளரான தீபக் ராஜாவை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் முடிவு செய்த நிலையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.