தென்காசி மாவட்டத்தில் வரத்து குறைவின் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைப்பொழிவின் காரணமாக சந்தைகளுக்கான பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில் வைகாசி விசாகம் மற்றும் தொடர் சுப முகூர்த்தம் உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் தேவை மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரத்து 200 ரூபாய் வரையிலும், பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், கனகாம்பரம் ஒரு கிலோ 2 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.