பெரும்பாலும் சமூக வலைதளத்திலிருந்து விலகியே இருப்பதாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டுவரை சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஆக்டிவாக இல்லை. இதுதொடர்பாக தோனி வெளியிட்ட வீடியோ ஒன்றில், எக்ஸ் தளத்தை விட இன்ஸ்டாகிராமே தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தால் எந்தவித பயனும் இல்லை என்றும், இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் அதனால் சர்ச்சைதான் ஏற்படுவதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராம் தனக்கு பிடித்தமானதாக இருந்தாலும், அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்க மாட்டேன் என்றும் தோனி கூறியுள்ளார்.