இலவச பேருந்து பயணம்! - மெட்ரோ வருவாய் இழப்பு!
Oct 2, 2025, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச பேருந்து பயணம்! – மெட்ரோ வருவாய் இழப்பு!

Web Desk by Web Desk
May 21, 2024, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால், ஐதராபாத் மெட்ரோவை 2026ம் ஆண்டுக்குப் பிறகு விற்க முடிவு செய்திருப்பதாக அதை நிர்வகிக்கும் L&T நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

மெட்ரோ இரயில் திட்டம் என்பது நகரங்களின் வாகன நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. பெரிய பெரிய நகரங்களின் இயங்கும் இந்த மெட்ரோ இரயில் சேவை முதன் முதலாக லண்டனில் கொண்டுவரப் பட்டது.

தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளில் மெட்ரோ திட்டம் விரிவடையத் தொடங்கியது.

இந்தியாவில் கொல்கத்தாவில் முதல் மெட்ரோ வந்தாலும் கூட , டெல்லியின் முதல் மெட்ரோ இரயில் 2002ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் மெட்ரோ ரயில் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வந்தாலும் , மெட்ரோ நிறுவனங்கள் இன்னமும் லாபம் பெறவில்லை என்பதே கசப்பான உண்மை .

ஏன் மெட்ரோவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை L&T நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன் சொல்லிருக்கிறார்.

ஹைதராபாத் மெட்ரோ இரயில் திட்டத்தில் 90 சதவீத பங்குகளை L&T நிறுவனமும் மீதமுள்ள 10 சதவீத பங்குகளை தெலங்கானா அரசும் கொண்டுள்ளன.

தெலங்கானா காங்கிரஸ் அரசு பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனாலேயே, மெட்ரோவில் பெண்கள் பயணிப்பது குறைந்து விட்டதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால், நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது.

ஹைதராபாத்தில் கடந்த நவம்பரில் 5.50 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது 4.80 லட்சமாக குறைந்துள்ளது முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த L&T நிறுவன தலைமை நிர்வாக தலைவருமான சங்கர் ராமன், ஹைதராபாத் மெட்ரோவின் பங்குகளை 2026க்குப் பின் விற்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

13000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஹைதராபாத் மெட்ரோ, தெலங்கானா அரசிடம் வட்டியில்லா கடனாக 3000 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், மெட்ரோவின் சில நிலங்களை விற்று நஷ்டத்தை சரி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலவசத் திட்டங்கள் மாநில கஜானாவை எப்படிக் கெடுக்கின்றன என்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்கள் நிதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், இலவசங்களை அறிவித்து மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்காக அரசுக் கஜானாவை காலியாக்க எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை என கடுமையாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துள்ளன.
பிரதமர் மோடி தெரிவித்தது போல , ‘ ஒரு நகரத்தில் மெட்ரோவை நிர்மாணித்து, நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி ஒருபுறம் வேகமாக அதிக முதலீட்டில் நடைபெற்றுவருகின்றன.

அதே சமயம் ,இன்னொரு புறம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதியளிக்கும் மாநில அரசுகளின் திட்டங்கள் மெட்ரோவின் நஷ்டத்துக்கு மட்டுமின்றி ,நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Free bus travelthe metro is selling at a loss!Free bus ride! - Metro revenue loss!
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம்! – அமித்ஷா

Next Post

எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies