சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!
Aug 9, 2025, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!

Web Desk by Web Desk
May 22, 2024, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகையே ஒரு வழியாக்கிய, கொரொனா வைரஸ் புது புது வடிவமெடுத்து இன்னமும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது, சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் அவசியம் முக கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது.

புதுவகையான நோய் என்றால் , நோய்க்கான காரணம் என்ன? எதனால் அந்தநோய் வந்தது ? என்பதைக் கண்டறிந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்குள் நோய்க்குப் பலர் பலியாகி விடுவார்கள்.

அப்படி ஒரு ஆபத்தான நோய் தான் கொரோனா. 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் உருவாகி, சிங்கப்பூருக்கு வந்து அதன் பின் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தது.

பல லட்சக் கணக்கான மக்கள் இறந்து போன நிலையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டது என்றாலும் , அந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

விடாத நோய் போல இந்த கொரோனா வைரஸ் ஆண்டுக்கு ஆண்டுக்கு, புதிது புதிதாக உருவம் மாறி வந்து மக்களைப் பாதிக்கிறது.

முதலில், கோவிட் – 19 வந்தது. அடுத்து JN வைரஸ் என்றானது .இப்போது கொரொனா வைரஸ் KP 1, KP 2 என்கிறார்கள்.

இதுவும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி ஆகி இருக்கிறது. சிங்கப்பூரில் இப்போது இந்த தொற்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் கடைசி வாரத்தில் 13,700 பேர் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், மே மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 30000 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக ஒருநாளைக்கு 250 பேருக்கு மேல் புதுவகை கொரொனாவால் பாதிக்கப் படுகின்றனர் என்று சிங்கப்பூர் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொடக்க நிலையில் உள்ள புதிய கொரொனா அலை, வரும் ஜூன் மாதத்துக்குள் உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

60 வயதுக்கு மேலுள்ள முதியவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையுடம் இருக்கவேண்டும் என்றும், கோவிட்-19 தடுப்பூசியை கடந்த 12 மாதங்களில் எடுத்துக் கொள்ளாதவர்கள்,உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி இருக்கிறது.

சமூக கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தனிமை படுத்தல் போன்ற நடவடிக்கைகளை கொண்டு வரும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் சிங்கப்பூர் மக்கள் பீதியுடன் தான் இருக்கிறார்கள்.

சீனாவில் உருவாகி , சிங்கப்பூர் வழியாக புது கொரொனா வைரஸ் ,உலகமெங்கும் பரவி வருகிறது.

ABC செய்தி நிறுவனத்தின் தகவல் படி, KP.2 கொரொனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 28 சதவீதம் பரவி உள்ளது எனத் தெரியவந்துளளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த புதுவகை கொரொனா வைரஸ் 91 பேரைப் பாதித்துள்ள நிலையில் இந்திய மக்களும் கவனமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. எனினும், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரொனா, முதல் அலையின் பாதிப்புகளில் இருந்தே இன்னுமும் உலகம் மீண்டு வரவில்லை. அதற்குள் அடுத்தடுத்து கொரொனா வகைகள் உருவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: A new type of corona spreading in Singapore!
ShareTweetSendShare
Previous Post

எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

Next Post

இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies