திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், அறுபடை வீடுகளில் 2வது படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், விசாக திருவிழாவிற்கு மறுநாள், பக்தர்கள் மீன் வாங்கி கோயில் வளாகத்தில் சமைத்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்தாண்டு கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.