மதுரை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை மொத்தம் 209 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடியாக உள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மழைப்பொழிவை பொறுத்து, ஜூன் மாதம் மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.