இலங்கையில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டிக்காக வீரர் மதீஷா பதிரனா அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இலங்கையில் பிரீமியர் லீக் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் விடும் பணி நடைபெற்றது. அப்போது வீரர் மதீஷா பதிரனாவை 1 லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் தொகைக்கு கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணி ஏலத்திற்கு எடுத்தது.
இந்த தொகை இந்திய மதிப்பில் 99 லட்சத்து 96 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும், இதனால் எல்.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை மதீஷா பதிரனா பெற்றுள்ளார்.