தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சர்வதேச யோகா தின விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், யோகா தினத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து, யோகா தினத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் பிற துறைகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.