கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் 4-ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் அதிக பட்சமாக 37 புள்ளி 34 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், கோதையார், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.