தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 17வயது சிறுவனை இருசக்கர வாகனத்துடன் கடத்தி தங்க செயினை பறிக்க முயன்ற கஞ்சா போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜீவ் நகரை சேர்ந்த 17வயது சிறுவன், தனது நண்பர்களுடன், பசுவந்தனை சாலையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அங்கு கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல், சிறுவனின் பைக்கிலே கத்தி முனையில் அவரை கடத்தி சென்றனர்.
சிறிது தூரம் சென்றவுடன், சிறுவனின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றபோது, பைக்கில் இருந்து கீழே குதித்து சிறுவன் தப்பி ஓடிவந்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.