சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையர்கள் கலந்துகொண்டு தங்கள் வீரத்தை பறைசாற்றினர்.
காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக 6ஆம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி காரைக்குடியில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 18க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட காளையர்களும் களமிறங்கினர். களத்தில் காளைகளை அடக்கி வீரத்தை பறைசாற்றிய வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளை உரிமையாளர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.