தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக பழைய குற்றாலம் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி 6-வது நாளாக தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.