கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சாலையூரில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தை ஒட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டும் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிக்கு சிறப்பு ஆராதணைகள் காட்டப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
மேலும், முருக பக்தி பாடல்களை பாடியபடி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.