பழனி நகராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயில் தாக்கத்தால், பழனி பகுதியில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைந்தன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் பழனி, கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.