மதுரை வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். விரகனூர் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரின் மகன் விஜய், தனது நண்பர்களுடன் வைகையாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது மாணவன் விஜய் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.