மதுரையில் புகை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்திகுளம் ஏஞ்சல் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சர்க்கரை என்பவர், நாராயணபுரம் மண்டல செயற்பொறியாளர் அலுவலக வளாக மேடையில் படுத்துறங்கியுள்ளார்.
அப்போது, அவரது அருகே முருகன் என்பவரும் படுத்துறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே, புகை பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கி கொண்டிருந்தபோது, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.