நீதிமன்ற ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னை பாரி முனையில் நடைபெற்றது.
இதில் தலைமை நீதிபதி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வகையிலான நீதிமன்ற ஊழியர்களுக்கான சேமநல திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 -ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, “இந்த திட்டத்தின் மூலம் 22 ஆயிரம் நீதிமன்ற பணியாளர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.