மானாமதுரை அருகே அம்மனுக்கு கறி, மீன் மற்றும் முட்டை படையல் வைத்து பெண்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளத்தில் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர் உள்ளிட்ட வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், கருவாடு மற்றும் முட்டை போன்றவைகளைக் கொண்டு வந்தனர்.
சுவையாக சமைத்த அசைவ உணவுகளை, ஓலைப் பெட்டியில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பின்னர், கோயிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை, அம்மனுக்கு படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.