ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வடமாடு எருதுகட்டு விழாவை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை கிராமத்தில், முத்தாலம்மன் நிறை குளத்து அய்யனார் கோயில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவரின் 32வது குருபூஜை விழாவையொட்டி வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் காளைகளை அடக்க 9 வீரர்கள் களத்தில் இறங்கினர். விழாவின் இறுதியில், பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை சுமார் 2 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.