அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
செந்துறை அடுத்துள்ள சிறுகடம்பூரில் செல்லியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா கடந்த 13-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 5-ஆம் நாள் மாதிரிதேர் விழாவும், 7-ஆம் நாள் பூந்தேரோட்ட விழாவும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, பொது மக்கள் அனைவரும் இணைந்து தேர்கட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி, மா, பலா ஆகியவற்றை தேரில் அலங்கரித்தனர்.
கோயில் சன்னதியில் இருந்து புறப்பட்ட திருத்தேர், முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் சந்நிதியை வந்தடைந்தது. தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.