தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறை சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநார் மாரிமுத்து என்பவர், அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.