சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெற்றியூர் என்.டி.ஓ. குப்பத்தைச் சேர்ந்த சரண் என்ற இளைஞரை, பட்டப் பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல், எல்லையம்மன் கோவில் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில், தலை மற்றும் கையில் பலத்த காயத்துடன் போராடிய சரணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தின் அருகே இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தர், ஸ்ரீதர், சரத், சுஜித் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், முன்விரோதம் காரணமாக சரணை கொலை திட்டமிட்டது தெரியவந்தது.